"ஓம் ஸ்ரீ ராம்" என 21 முறை எழுதி, பதவியேற்ற மத்திய அமைச்சர்: வீடியோ வைரல்
"ஓம் ஸ்ரீ ராம்" என 21 முறை எழுதி, பதவியேற்ற மத்திய அமைச்சர்: வீடியோ வைரல்
ADDED : ஜூன் 13, 2024 05:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 21 முறை 'ஓம் ஸ்ரீராம்' என ராம் மோகன் நாயுடு எழுதினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவுக்கு (வயது 36) இடம் கிடைத்துள்ளது. ராம் மோகன் நாயுடுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. அவர் இன்று (ஜூன் 13) பதவி ஏற்று கொண்டார்.
பதவி ஏற்பதற்கு முன்னதாக, அவர் “ஓம் ஸ்ரீ ராம்” என ஒரு தாளில் 21 முறை எழுதிவிட்டு, பின்னர் பதவி ஏற்றார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.