ADDED : செப் 13, 2024 08:01 PM

மும்பை: மும்பையில் மின்சார ரயிலில் பொதுமக்களுடன் பயணித்து அவர்களிடம் கலந்துரையாடினார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இன்று ( செப்.,13) தெற்கு மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் டெர்மினல் ரயில் நிலையம் வந்தார் அங்கிருந்து மின்சார ரயிலில் ஏறி மத்திய மும்பையின் பஹான்துப் ரயில்நிலையத்தில் இறங்கினார். இதன் மூலம் 27 கி.மீ. தூரம் மின்சார ரயிலில் பொதுமக்களுடன் பயணித்தார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்பயணத்தின் போது பொதுமக்களிடம் மின்சார ரயிலில் பயணித்தின் போது சந்திக்கும் பிரச்னைகள், அனுபவங்களை கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது,
மும்பை பெருநகரப் பகுதியில் 301 கி.மீ. தொலைவில் பாதைகளை இணைக்கும் வகையில் ரூ.16,240 கோடி செலவில் 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.