ADDED : ஜூலை 20, 2024 12:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோண்டா: யூனியன் பிரதேசமான சண்டிகரில் இருந்து வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகருக்கு சென்ற, எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் உத்தர பிரதேசத்தின் கோண்டா அருகே, தடம் புரண்டது. இதில் 35 பயணியர் காயம் அடைந்ததாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கோண்டா கலெக்டர் நேஹா சர்மா கூறினார்.
அவர் கூறியதாவது:
ரயில் விபத்தில் அடையாளம் தெரியாத மேலும் இரு பயணியர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நான்கு ஆக அதிகரித்துள்ளது.
படுகாயம் அடைந்த ஆறு பயணியரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தடம் புரண்ட ரயிலில் பயணித்த 600 பயணியர், சிறப்பு ரயிலில் அசாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.