ADDED : ஜூலை 02, 2024 06:42 AM
தங்கவயல்: கோலார் மாவட்டத்தில் முதல் தபால் நிலையம் என்ற பெருமையுள்ள உரிகம் தபால் நிலைய கட்டடம் பழுதானதால், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. சீரமைக்கும் பணி முடிந்ததால், 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 28ல் எளிமையான முறையில் திறக்கப்பட்டது.
இதன் பரிவர்த்தனைகள் நேற்று காலை முதல் துவங்கியது. தபால் நிலையம் திறக்கப்பட்ட விபரம் தெரியாததால், ஏற்கனவே இயங்கி வந்தராபர்ட்சன் பேட்டை தபால் நிலையத்திற்கே சிலர் சென்றனர். அங்கு தகவல் பெற்று, உரிகம் தபால் நிலையத்திற்கு திரும்பினர்.
இருந்தபோதிலும்,இங்கு மிக குறைவான வாடிக்கையாளர்களே வந்திருந்தனர்.இருந்த போதிலும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோலார் மாவட்டத்தில், பழமையான தங்கவயலின் உரிகம் தபால் நிலையம், அதன் வர்த்தக பரிவர்த்தனைகளை 12 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முதல் துவங்கியது.