sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் அரசுக்கும் எல்.ஜி.,க்கும் 'பனிப்போர்'

/

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் அரசுக்கும் எல்.ஜி.,க்கும் 'பனிப்போர்'

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் அரசுக்கும் எல்.ஜி.,க்கும் 'பனிப்போர்'

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் அரசுக்கும் எல்.ஜி.,க்கும் 'பனிப்போர்'


ADDED : ஆக 22, 2024 07:37 PM

Google News

ADDED : ஆக 22, 2024 07:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவில் லைன்ஸ்:மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, தலைமைச் செயலர், முதன்மை உள்துறைச் செயலருக்கு துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக மாநில தலைமைச் செயலர், முதன்மை உள்துறைச் செயலருக்கு துணைநிலை கவர்னர் நேற்று முன்தினம் அனுப்பிய கடிதம்:

டில்லி சுகாதாரத் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து துணை நிலை கவர்னர் ஆய்வு மேற்கொண்டார். மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக அரசு எந்த முடிவு எடுக்கவில்லை.

முதல்வர் கைதாகி சிறைக்குச் சென்ற பிறகு தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தின் கூட்டத்தை கூட்டவே இல்லை. அரசு மருத்துவமனைகளில் கடுமையான பணியாளர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவ சேவைக்கு தீர்வு காண உடனடியாக வழியை கண்டறியுங்கள்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை கவர்னர் மாளிகைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

மாநில அரசின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மாநில சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்கள் இருப்பது குறித்து துணைநிலை கவர்னர் மாளிகைக்கு அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த பிரச்னை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

சுகாதாரத்துறை காலிப்பணியிடங்கள் குறித்து விரிவான அறிக்கையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறையில் 1,364 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 234 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தவிர புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகளுக்கும் பணியிடங்கள் உருவாக்கும் செயல்முறைகூட முழுமை அடையவில்லை. இந்த விவகாரத்திலும் 'பனிப்போர்' நீடிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறியதாவது:

சமீபத்தில், இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்தில் வந்தது. உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு பரிந்துரைத்தது. போர்க்கால அடிப்படையில் பணியமர்த்தப்பட வேண்டும்.

ஆஷா கிரண் தங்குமிடத்தின் பல நோயாளிகள் இறந்தபோது ஊழியர்களின் பற்றாக்குறையை டில்லி சுகாதார அமைச்சர் சவுரப் பரத்வாஜ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

அப்போது, பணியாளர்கள் பற்றாக்குறைக்கு துணை நிலை கவர்னர் பொறுப்பு இல்லை என்று கவர்னர் மாளிகை கூறியது. இந்த கடிதம், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நிரூபித்துள்ளது.

புதிய மருத்துவமனைகளிலும், தற்போதுள்ள மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 14,000 படுக்கைகள் கட்டப்பட்டு வருகின்றன.

வரவிருக்கும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட டாக்டர்கள், நிபுணர்கள், துணை மருத்துவர்களின் பணியிடங்களை உருவாக்குமாறு சுகாதார செயலருக்கு அமைச்சர் பரத்வாஜ் பல குறிப்புகளை அனுப்பியுள்ளார்.

புதிதாக அமையும் மருத்துவமனைகளுக்கு இன்று வரை ஒரு பணியிடம் கூட உருவாக்கப்படவில்லை. சேவைகள் துறையால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னரே, மருத்துவர்கள், நிபுணர்களை பணியமர்த்துவதற்காக, யு.பி.எஸ்.சி.,க்கு அனுப்ப முடியும். அதன் பிறகு, மருத்துவர்கள், நிபுணர்களை வரவழைக்க குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். இது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறை.

டில்லி அரசின் தற்போதைய மருத்துவமனைகள் ஏற்கனவே 30 சதவீத மருத்துவர்கள், நிபுணர்களின் காலியிடங்களை எதிர்கொள்கின்றன.

துணைநிலை கவர்னர் தற்போதைய வேகத்தில் செயல்பட்டால், புதிய மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள், நிபுணர்கள், துணை மருத்துவர்களை பணியமர்த்த இன்னும் 10 ஆண்டுகள் ஆகலாம்.

மருத்துவர்கள் நியமிக்கப்படாமல், புதிதாக கட்டப்பட்ட உள்கட்டமைப்பு, தளவாடங்கள், சேவைகள், உபகரணங்கள் மோசமடையத் தொடங்கும்.

இவ்வாறு ஆம் ஆத்மி கூறியுள்ளது.






      Dinamalar
      Follow us