ADDED : செப் 14, 2024 08:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கபுர்தலா:பஞ்சாப் மாநிலத்தில், பைக் மீது வேன் மோதி இருவர் உயிரிழந்தனர்.
கபுர்தலா அருகே டபுர்ஜி கிராமத்தைச் சேர்ந்த மன்பிரீத்,25, விக்கி,30, மற்றும் பாபி ஆகிய மூவரும் ஒரே பைக்கில் கர்தர்பூருக்கு நேற்று சென்றனர். கர்தார்பூரில் இருந்து எதிரில் வந்த வேன், டிரைவர் கட்டுபாட்டை இழந்து, பைக் மீது மோதியது. பைக்கில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
மன்பிரீத் மற்றும் விக்கி ஆகிய இருவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த பாபி, ஜலந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.