உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 10, 2024 06:27 AM

அ நிறம் | அளவு
தங்கவயல்: ராபர்ட் சன் பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில், கல்யாண வாராஹி அம்மன் காலபைரவர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து ஓராண்டு நிறைவை ஒட்டி நேற்று ஹோம பூஜைகள், கல்யாணோற்சவம் நடந்தது.
ராபர்ட் சன் பேட்டை 4வது பிளாக் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் கோவில். இக்கோவிலில் 2023 ஆகஸ்ட் 9ல் வாராஹி அம்மன், காலபைரவர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
இதன் ஓராண்டு நினைவை ஒட்டி நேற்று காலை மஹா கணபதி ஹோமம், வாராஹி உன்மத்த காலபைரவர் ஹோமம், அலங்கார திருமஞ்சனம், கல்யாண உற்சவம் நடந்தது. இப்பூஜைகளில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
