மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் அதிரடி மாற்றம்
மத்திய அரசின் பல்வேறு துறை செயலர்கள் அதிரடி மாற்றம்
UPDATED : ஆக 16, 2024 09:14 PM
ADDED : ஆக 16, 2024 09:08 PM

புதுடில்லி: மத்திய அரசின் ராணுவம், நிதி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் செயலர்களாக உள்ள சீனியர் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய பதவிகளும் உருவாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது,
* மூத்த ஐ.ஏ.எஸ். தீப்தி உமாசங்கர்.ஜனாதிபதியின் புதிய செயலர்.
* புனியா சலிலா ஸ்ரீ வத்ஸவா - சுகாதாரம், மற்றும், குடும்ப நலத்துறை சிறப்பு செயலர்
* ராஜேஷ்குமார் சிங் - பாதுகாப்புத்துறை செயலர்
* கடிகிதலா ஸ்ரீனிவாஸ் - வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகர செயலர்.
* விவேக் ஜோஷி - பணியாளர் மற்றும் பயிற்சித்துறை செயலர்.
* நாகராஜூ மத்திராலா - நிதித்துறை செயலர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

