தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ கிராமத்தினருக்கு முன்னுரிமை

கிராமத்தினருக்கு முன்னுரிமை

கிராமத்தினருக்கு முன்னுரிமை


ADDED : ஏப் 14, 2024 07:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 07:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தங்கவயல்: தங்கவயல் நகர காங்கிரஸ் சார்பில், லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று ராபர்ட்சன் பேட்டை கிங் ஜார்ஜ் அரங்கில் நடந்தது.

கோலார் காங்கிரஸ் வேட்பாளர் கவுதம் வருகைக்காக வந்தவர்களை விட, தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா மெச்சும் படி, தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அவரின் ஆதரவாளர்கள் ஆர்வம் காட்டினர்.

தங்கவயல் தொகுதியில் கிராமப் பகுதிகளை, நகரத்துடன் இணைத்தபோது, நகரப் பகுதி, கிராமப் பகுதி பிளாக் காங்கிரஸ் என, இரு பிரிவாக இயங்கி வருகிறது.

கிராமப் பகுதிகளில் நடக்கும் கட்சி நிகழ்ச்சிகளில் நகர பகுதியின் பிரமுகர்களை காண்பதே அரிதாகும். அப்படி பங்கேற்றாலும் உரிய மரியாதை கிடைப்பது இல்லை என்ற குறையும் அவர்களிடையே இருந்து வருகிறது. ஆனால், நகரப் பகுதியில் நடக்கிற விழா மற்றும் நிகழ்ச்சிகளில் கிராமத்தினருக்கு முன்னுரிமை கொடுத்து கவுரவிப்பது வழக்கமாகிவிட்டது.

நேற்றைய கூட்டத்தில், மேடையில் அமருவதற்கு முன்னாள் நகராட்சி தலைவர் முனிசாமிக்கு கூட இடம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கவுன்சிலர்களும் நாங்களும் இருக்கிறோம் என்று அடையாளம் காட்ட வந்திருந்தனர்.

தங்கவயல் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் கவுதமின் உறவினர்கள், சமுதாயத்தினர் பலர் உள்ளனர். அவர்களில் பலர், தாங்களாகவே பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

மேடையில் நகரப் பகுதி காங்கிரஸ் தலைவர்கள் இல்லை. கிராமப் பகுதி காங்கிரசார் தான் உள்ளனர். இடம்: கிங் ஜார்ஜ் அரங்கம், ராபர்ட்சன்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us