'சிவசங்கரப்பாவை விமர்சிக்க வினய்குமாருக்கு தகுதி இல்லை'
'சிவசங்கரப்பாவை விமர்சிக்க வினய்குமாருக்கு தகுதி இல்லை'
ADDED : ஆக 13, 2024 08:48 PM

தாவணகெரே: “சாமனூர் சிவசங்கரப்பாவை விமர்சிக்கும் தகுதி, வினய் குமாருக்கு இல்லை,” என, தாவணகெரே மாவட்ட காங்கிரஸ் தலைவர் மஞ்சப்பா கூறி உள்ளார்.
கட்சி உத்தரவை மீறி, லோக்சபா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டதால், தாவணகெரேயைச் சேர்ந்த வினய்குமார் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக, சாமனுார் சிவசங்கரப்பா குடும்பம் நிற்கவில்லை என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, வினய்குமார் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், தாவணகெரே மாவட்ட காங்கிரஸ் தலைவர் மஞ்சப்பா நேற்று அளித்த பேட்டி: சாமனுார் சிவசங்கரப்பா குடும்பத்தை விமர்சித்து பேசும் தகுதி, வினய்குமாருக்கு இல்லை. கட்சி உத்தரவையும் மீறி தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு கட்சியின் கொள்கை, சித்தாந்தம் பற்றி தெரியாது.
சாமனுார் சிவசங்கரப்பாவுக்கும், முதல்வர் சித்தராமையாவுக்கும் இடையில் நல்லுறவு உள்ளது. இது தெரியாமல் வினய் குமார் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இனிமேல், அவர் பேசும் முன் யோசித்துப் பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

