ADDED : மே 07, 2024 11:27 PM

பீதர் : ஓட்டுப்பதிவின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, பீதர் பா.ஜ., வேட்பாளர் பகவந்த் கூபா மீது, வழக்குப்பதிவானது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஓட்டு போட செல்லும் போது, கட்சியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில், கட்சியின் துண்டு, கட்சியின் சின்னத்தை கொண்டு செல்ல கூடாது என்ற, விதிமுறை அமலில் உள்ளது.
இதை மீறினால், தேர்தல் நடத்தை விதிமுறையாக கருதப்படும்.
இந்நிலையில் பீதர் பா.ஜ., வேட்பாளரான, மத்திய ரசாயனத் துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா, பீதரில் குடும்பத்தினருடன் நேற்று ஓட்டு போட்டார்.
அப்போது பகவந்த் கூபா தனது சட்டையில், பா.ஜ., கட்சியின் சின்னமான, தாமரை பேட்ஜ் அணிந்திருந்தார்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரில், பீதர் போலீசில் பகவந்த் கூபா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

