sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

96 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் வன்முறை

/

96 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் வன்முறை

96 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் வன்முறை

96 தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் வன்முறை


ADDED : மே 14, 2024 01:39 AM

Google News

ADDED : மே 14, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ஆந்திரா, தெலுங்கானா, பீஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு நேற்று நடந்த நான்காம் கட்ட லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.

நாடு முழுதும் 18வது லோக்சபாவை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஏப்., 19ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கும், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 88 தொகுதிகளுக்கும், மே 7ல் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

1,717 வேட்பாளர்கள்


இந்நிலையில், நான்காம் கட்டமாக, ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 1,717 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஆந்திராவில் 25; பீஹாரில் ஐந்து; ஜார்க்கண்டில் நான்கு; மத்திய பிரதேசத்தில் எட்டு; மஹாராஷ்டிராவில் 11; ஒடிசாவில் நான்கு; தெலுங்கானாவில் 17; உத்தர பிரதேசத்தில் 13; மேற்கு வங்கத்தில் எட்டு மற்றும் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

மேலும், ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டசபை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 147 தொகுதிகளில், முதற்கட்டமாக 28 தொகுதிகளுக்கும் நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.

காலை 7:00 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6:00 மணி வரை நடந்தது. சில இடங்களில், வாக்காளர்கள் முன்கூட்டியே வரிசையில் நின்றதால், மாலை 6:00 மணிக்கு பின்னும் ஓட்டுப்பதிவு நடந்தது.

இந்நிலையில், மாலை 6:00 மணி நிலவரப்படி, 63.04 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, மேற்கு வங்கத்தில் 76.02 சதவீத ஓட்டுகளும், குறைந்தபட்சமாக, ஜம்மு - காஷ்மீரில், 36.88 சதவீத ஓட்டுகளும் பதிவாகின.

ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்., - எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியினரிடையே சில மாவட்டங்களில் மோதல் ஏற்பட்டது.

வெமுரு தொகுதியில் ஐந்து ஓட்டுச்சாவடிகளை தெலுங்கு தேசம் தலைவர்கள் கைப்பற்றியதாக, ஒய்.எஸ்.ஆர்.காங்., குற்றம் சாட்டியது.

முகவர்கள் கடத்தல்


மேலும், குப்பத்தில் உள்ள ஓட்டுச்சாவடி எண் 57-ல், ஓட்டுச்சாவடி அதிகாரியுடன் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் இணைந்து தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. சித்துார் மாவட்டம் போகரமண்டா கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் ஓட்டுச்சாவடி முகவர்கள் மூன்று பேரை, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆதரவாளர்கள் கடத்தினர்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசாரின் உதவியுடன் மூன்று பேரையும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

சித்துார் குடிபாலா மண்டலத்தில் உள்ள மண்டி கிருஷ்ணாபுரம் கிராமத்தில், கட்சி முகவர் சுரேஷ் ரெட்டி கத்தியால் குத்தப்பட்டதாக ஒய்.எஸ்.ஆர்.காங்., குற்றம் சாட்டியது.

நரசராவ் பேட்டை என்ற இடத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட சிறு தகராறு, பெரிய கலவரமாக வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். ரப்பர் குண்டுகளை சுட்டு, வன்முறையாளர்களை போலீசார் கலைத்தனர். மேற்கு வங்கத்தில், பிர்பூம் மற்றும் பர்தாமான்- துர்காபூர் லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், ஆளும் திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., தொண்டர்கள் மோதிக் கொண்டனர்.

இங்கு ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்ததாக தேர்தல் கமிஷன் கூறினாலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் செயலிழந்ததாகவும், முகவர்கள் சாவடிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டதாகவும் 1,088 புகார்கள் வந்துள்ளன.

ஒடிசாவின் பல்வேறு இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. மேலும், கடமை தவறியதற்காக இரு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.

ஜம்மு - காஷ்மீரில் எந்தவித அசம்பாவிதமுமின்றி ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில், நான்கு கட்ட தேர்தல்களையும் சேர்த்து, 379 தொகுதிகளுக்கு இதுவரை ஓட்டுப்பதிவு நடந்துள்ளது.

வரும் 20ல், ஐந்தாம் கட்ட தேர்தலில் 49 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது.

எம்.எல்.ஏ., மீது வழக்கு

ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் இடாநகர் ஓட்டுச்சாவடியில் ஏராளமானோர் ஓட்டளிக்க வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த தெனாலி தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் எம்.எல்.ஏ., அன்னபதுனி சிவகுமார், வரிசையில் நிற்காமல் ஓட்டு போடச் சென்றார். இதை, வரிசையில் நின்றிருந்த வாக்காளர் ஒருவர் தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார், அந்த நபரின் கன்னத்தில் பளார் என அறைந்தார். பதிலுக்கு அவர் எம்.எல்.ஏ.,வை அடித்தார். இதையடுத்து, சிவகுமாரின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அந்த நபரை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், எம்.எல்.ஏ., சிவகுமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us