ADDED : ஜூன் 14, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவில் லைன்:தேசியத் தலைநகர் தண்ணீர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், தண்ணீர் திருட்டைத் தடுக்க முனாக் கால்வாயில் கண்காணிப்பை உறுதி செய்யுமாறு, டில்லி காவல்துறைத் தலைவருக்கு துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கும்படி, காவல் துறை தலைவருக்கு கவர்னர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி, முனாக் கால்வாயில் டேங்கர் லாரிகள் சட்டவிரோத நீர் நிரப்புவதை தடுக்க, காவல் துறை அதிகாரியின் உதவி ஆணையரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிடும்படி, துணை நிலை கவர்னருக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.