2014, 2019 லோக்சபா தேர்தல்களை விட 2024ல் ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்வு
2014, 2019 லோக்சபா தேர்தல்களை விட 2024ல் ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்வு
ADDED : மே 09, 2024 10:27 PM
பெங்களூரு, - லோக்சபா தேர்தலில், 2014, 2019 ம் ஆண்டை விட, இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிப்பதற்காக, தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சமீப காலமாக, நகர மக்களை ஈர்க்கும் வகையில், சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
தெருமுனை நாடகம்
இந்த வகையில், கர்நாடகாவில் இம்முறை இரண்டு கட்டங்களாக நடந்த லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கும் வகையில், தெரு முனை நாடகம், பைக் பேரணி, பழங்கால கார்கள் பேரணி, கல்லுாரி நிகழ்ச்சிகள், நாளிதழ்கள், டிவிக்களில் விளம்பரம், சமூக வலைதளங்கள் இப்படி பல விதமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு
இதே வேளையில், அரசியல் கட்சியினரும் தங்கள் தொண்டர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதன் பலனாக, கடந்த இரண்டு முறை நடந்த லோக்சபா தேர்தல்களை விட, இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்துள்ளது.
அதாவது 2014ல், 67.20 சதவீதம்; 2019ல் 68.81 சதவீதம்; 2024ல் 70.64 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. 2014 விட 3 சதவீதமும்; 2019 விட 2 சதவீதமும் அதிகமாக பதிவாகி உள்ளது.
தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம்