ADDED : மார் 22, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல்: லோக்சபா தேர்தலை ஒட்டி தங்கவயல் சட்டசபைத் தொகுதியில் அமைந்துள்ள 210 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்ந்தன.
தங்கவயல் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 210 ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான 310 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.
தங்கவயல் தாசில்தார் ராம லட்சுமையா, நகராட்சி ஆணையர் பவன் குமார், தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் கோரமண்டல் ஸ்கூல் ஆப் மைன்ஸ் கல்லுாரியில் 'ஸ்ட்ராங் ரூம்' எனும் கட்டுப்பாட்டு அறையில் மிகுந்த பாதுகாப்புடன் வைக்கப் பட்டுள்ளன.

