sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பெட்டிமுடி சம்பவத்தை நினைவு கூறும் வயநாடு நிலச்சரிவு

/

பெட்டிமுடி சம்பவத்தை நினைவு கூறும் வயநாடு நிலச்சரிவு

பெட்டிமுடி சம்பவத்தை நினைவு கூறும் வயநாடு நிலச்சரிவு

பெட்டிமுடி சம்பவத்தை நினைவு கூறும் வயநாடு நிலச்சரிவு


ADDED : ஆக 01, 2024 11:12 PM

Google News

ADDED : ஆக 01, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தை நினைவு கூறும் வகையில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது.

மூணாறு பகுதியில் 2020 ஆக.5 முதல் பலத்த மழை பெய்தது. அந்த மழை 70 தமிழர்களின் உயிரை காவு வாங்க காத்திருந்ததை யாரும் உணரவில்லை. மறு நாளும் பலத்த மழை தொடர்ந்தது. வெளி உலகை அறிய முடியாத நிலையில் தொழிலாளர்கள் வழக்கத்தை விட முன்கூட்டியே துாங்க சென்றனர்.

அது போன்று மூணாறில் இருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள ராஜமலை பெட்டிமுடி பகுதியில் வசித்த தொழிலாளர்கள், பொதுமக்கள் நூற்றுக் கணக்கானோர் துாங்க சென்றனர்.

பலர் நன்கு துாங்கிக் கொண்டிருந்த நிலையில் 2020 ஆக.6 இரவு 10:45 க்கு பல கி.மீ., தொலைவில் மலை மீது ஏற்பட்ட நிலச்சரிவால் மரங்கள், பாறைகள், கற்கள் ஆகியவற்றுடன் பாய்ந்து வந்த காட்டாற்று வெள்ளம் தொழிலாளர்கள் வசித்த வரிசை வீடுகளைக் கொண்ட நான்கு கட்டடங்கள் உட்பட எட்டு கட்டடங்களை விழுங்கி நொடி பொழுதில் காணாமல் போனது.

அதில் தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த நிலையில் எட்டு பேர் உயிர் தப்பினர். சிலர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மின்சாரம், தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அப்பகுதியில் நடப்பது குறித்து தொழிலாளர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. சம்பவம் குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவும் இயலவில்லை. அதனால் சேறும், சகதியிலும் இரவு முழுவதும் சிக்கிய சிலரை காப்பாற்ற இயலாமல் அதிகாலை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அப்பகுதிக்கு ஆக.7 காலையில் சென்ற போது தான் நிலச்சரிவு ஏற்படுத்திய கோர சம்பவம் வெளி உலகுக்கு தெரியவந்தது. முதலில் சம்பவ இடத்திற்குச் சென்ற தொழிலாளர்கள் மீட்டு பணியில் ஈடுபட்டனர். அதன் பிறகு தீயணைப்பு துறையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் என ஒவ்வொரு துறையினரும் வர துவங்கினர். மண்ணில் புதைந்தவர்களை தேடிய போது தோண்டத் தோண்ட உடல்கள் கிடைத்தன. சில உடல்கள் பெட்டிமுடி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பல கி.மீ., தொலைவில் இருந்து மீட்கப்பட்டன. 70 பேர் காணாமல் போன நிலையில் 66 பேரின் உடல் மீட்கப்பட்டன. 19 நாட்கள் நீண்ட மீட்பு பணியில் மாயமான நான்கு பேரில் உடல்களை கண்டு பிடிக்க இயலாததால் அவர்கள் இறந்ததாக அரசு அறிவித்தது.

கேரளாவை உலுக்கிய அந்த துயர சம்பவத்தை தொழிலாளர்கள் மறக்க இயலாத நிலையில் அந்த நாள் நெருங்க இன்னும் நான்கு நாட்கள் மட்டும் உள்ளன. அதற்கு முன் பெட்டிமுடி சம்பவத்தை நினைவு கூறும் வகையில் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us