ADDED : பிப் 14, 2025 11:17 PM

மணிப்பூருக்கு ஜனாதிபதி ஆட்சி தீர்வு கிடையாது. மாநில மக்கள் இதை ஒருபோதும் விரும்பியதில்லை. எனவே, கலவரத்தால் இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் பழைய இடங்களில் குடியமர்த்த முன்னுரிமை அளிக்க வேண்டும். மாநிலத்துக்கு மத்திய அரசு புதிய தொழில்களை கொண்டு வர வேண்டும்.
இரோம் சர்மிளா, மனித உரிமை செயற்பாட்டாளர்
அதானியை காப்பாற்றுகிறார்!
தொழிலதிபர் அதானி குறித்து உள்நாட்டில் கேள்வி கேட்டால் அமைதி காப்பதும், வெளிநாட்டில் அதை தவிர்ப்பதும் என பிரதமர் மோடி, அதானியை காப்பாற்றி வருகிறார். அவரை பொறுத்தவரை அதானியின் பாக்கெட்டை நிரப்புவது தான், நாட்டை கட்டியமைக்கும் பணி.
ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்
அரசியல் தீர்வு என்ன?
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி இருப்பது, மாநில அரசின் முழு தோல்வியையும், மத்திய அரசின் முழு தோல்வியையும் உறுதிப்படுத்துகிறது. மணிப்பூரில் நிலவும் கொந்தளிப்புக்கு, அரசியல் தீர்வுக்கான பாதை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.
ராஜா, பொதுச்செயலர், இந்திய கம்யூனிஸ்ட்
