என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி: சீமான் "கலகல"
என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி: சீமான் "கலகல"
ADDED : மே 06, 2024 04:53 PM

சென்னை: தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நிருபர்கள் கேள்விக்கு, 'எங்களுக்கு வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. என்ன கேள்வி இது! கிளி ஜோசியம் பாக்குற மாதிரி இருக்கிறது' என அக்கட்சி தலைவர் சீமான் பதில் அளித்தார்.
மேலும் சீமான் கூறியதாவது: போட்டி போடுவது எல்லா இடத்திலும் வெற்றி பெறுவதற்கு தான். தனிப்பட்ட முதலாளியின் வளர்ச்சி எப்படி நாட்டின் வளர்ச்சியாகும்?. சாலைக்கு பெயர் தேசிய நெடுஞ்சாலை. குறுக்கே கட்டை போட்டு வசூல் செய்பவர்கள் தனியார் முதலாளி. சாலையை விற்றுவிட்டார்கள்.
இப்பொழுது நாட்டை விற்று கொண்டு இருக்கிறார்கள். ஜாபர் சாதிக் என்ன செய்தார் என்று தெரியாது. அமீர் சொல்லும், நியாயத்தை உணர வேண்டும். ஒரு முதலாளி படம் எடுக்க வரும் போது, உங்களுக்கு பணம் எப்படி வந்தது என்று கேட்டு விட்டு, யாரும் படம் எடுப்பது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

