ADDED : மார் 03, 2025 11:52 PM

தெலுங்கானாவில், பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் தரப்படும் என, அளிக்கப்பட்ட வாக்குறுதியை முதல்வர் ரேவந்த் ரெட்டி நிறைவேற்ற வேண்டும். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்.
கவிதா
எம்.எல்.சி., பாரத் ராஷ்ட்ர சமிதி
விமர்சிப்பது தவறு!
தேர்தல் கமிஷன் அதற்கான பாதையில் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்கள் பெயர்களை பதிவு செய்ய உரிமை உண்டு. இதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா, தேர்தல் கமிஷனை விமர்சிப்பது தவறு; இது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
ராம்தாஸ் அதவாலே
மத்திய அமைச்சர்,
இந்திய குடியரசு கட்சி
இது ஆரம்பம்தான்!
டில்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மியின் ஊழலை, தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது; இது வெறும் ஆரம்பம் தான். பல்வேறு துறைகளில் அக்கட்சி செய்த முறைகேடுகள் அனைத்தும் விரைவில் வெளிவரும்.
கஜேந்திர சிங் ஷெகாவத்
மத்திய அமைச்சர்,
பா.ஜ.,