என்ன கொண்டு செல்கிறாய்?: எங்கிருந்து வருகிறாய்? மகா., முதியவருக்கு 'பளார்'
என்ன கொண்டு செல்கிறாய்?: எங்கிருந்து வருகிறாய்? மகா., முதியவருக்கு 'பளார்'
UPDATED : ஆக 31, 2024 08:08 PM
ADDED : ஆக 31, 2024 07:56 PM

மும்பை: முதியவர் ஒருவர் கொண்டு வந்த பார்சல் குறித்து சந்தேகம் அடைந்த ரயில் பயணிகள் அவருக்கு பளார் விட்டனர். அதே நேரத்தில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை என கூறப்படுகிறது.
மகா., மாநிலம் ஜாலேகான் மாவட்டத்தில் வசிப்பவர் ஆசிப் முன்யார். இவர் தன்னுடைய மகள் வசிக்கும் மாலேகான் பகுதிக்கு செல்ல துலே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். மகளை பார்ப்பதற்காக மட்டன் கொண்டு சென்றுள்ளார்.
மாநிலத்தில் இந்துக்கள் சர்வான் மாதத்தை புனித மாதமாக கொண்டாடி வருகின்றனர்.
மாநில விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி பசுக்கள் காளைகள் வெட்டுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் எருமைமாடுகளுக்கு தடை விதிக்கப்படவில்லை.
அவர் கொண்டு சென்ற பைகள் மீது சந்தேகம் அடைந்த சக பயணிகள் அவரிடம் எங்கிருந்து வருகிறாய் என்ன கொண்டு செல்கிறாய். எங்கே போகிறாய் என சரமாரி கேள்வி கேட்டதுடன் அவருக்கு பளார், பளார் என விட்டுள்ளனர். அதே நேரத்தில் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை.
பளார் விட்டவர்களில் ஒருவர் சந்தேகம் கொண்டு அது எருமை மாட்டு இறைச்சியாக இருக்குமோ என போனில் படம் பிடித்துள்ளார்.
நாங்கள் அதை சோதித்தவுடன் அதைப் பற்றி (இறைச்சி வகை) தெரிந்து கொள்வோம்,' என்று ஒருவர் பதிலளித்தார். 'இது சாவான் சீசன். இது எங்கள் திருவிழா, நீங்கள் இதைச் செய்கிறீர்கள்' என்று மற்றொருவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து ரயில்வே கமிஷனர் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளார். முதியவரை அடித்தது யார் என ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். வீடியோ வைரலானதை தொடர்ந்து முதியவரை ரயில்வே போலீசார் தொடர்பு கொண்டனர். மேலும் துலே பகுதியில் வசிக்கும் இரண்டு குற்றவாளிகளை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.