sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உதயகிரி கலவரத்தில் நடந்தது என்ன? முதல்வர், உள்துறை அமைச்சர் விசாரணை!

/

உதயகிரி கலவரத்தில் நடந்தது என்ன? முதல்வர், உள்துறை அமைச்சர் விசாரணை!

உதயகிரி கலவரத்தில் நடந்தது என்ன? முதல்வர், உள்துறை அமைச்சர் விசாரணை!

உதயகிரி கலவரத்தில் நடந்தது என்ன? முதல்வர், உள்துறை அமைச்சர் விசாரணை!


ADDED : பிப் 15, 2025 02:46 AM

Google News

ADDED : பிப் 15, 2025 02:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: 'மைசூரு உதயகிரி கலவரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பக்கூடாது. அதேவேளையில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது' என, போலீசாருக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உ.பி., முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் அரை நிர்வாண படங்களை வெளியிட்டு, அதன் மீது சர்ச்சைக்குரிய வாசகங்களை எழுதிய படங்கள், மைசூரு நகரின் உதயகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளத்தில் வெளியானது.

* கல் வீச்சு

உதயகிரி போலீசார், அந்நபரை உடனடியாக கைது செய்து, போலீஸ் நிலையத்தில் வைத்தனர். இதனால், சம்பந்தப்பட்ட சமூகத்தினர் சமாதானம் அடைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில், அந்நபர் விடுவிக்கப்பட்டதாக தகவல் பரவியது.

கோபமடைந்த குறிப்பிட்ட சமூகத்தினர், போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்தும் கேட்கவில்லை. கூட்டத்தில் இருந்த சிலர், போலீசார் மீது கற்களை வீசினர். இதனால் அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தினர்.

போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், நேற்று மைசூரு வருகை தந்திருந்தார். உதயகிரி போலீஸ் நிலையம் சென்றார். சம்பவம் தொடர்பாக சட்டம் - ஒழுங்கு டி.சி.பி., முத்துராஜு விளக்கினார். தலைமறைவாக உள்ளோரை கைது செய்யும்படி வலியுறுத்தினார்.

* குற்றவாளிகள்

பின், பரமேஸ்வர் அளித்த பேட்டி:

கலவரம் தொடர்பாக, முதல்கட்ட விசாரணை குறித்து கேட்க இங்கு வந்தேன். அதிகாரிகளும் விபரங்களை கூறியுள்ளனர். சம்பவம் நடந்த அன்றே விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தேன். போலீசாரையும், போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து, பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டத்தை கையில் எடுத்து கொள்வோர், எவ்வளவு பெரிய நபர்களாக இருந்தாலும், விடமாட்டோம். சம்பவம் குறித்து குற்றம் சொல்வோர், குற்றம் சொல்லிக்கொண்டே இருப்பர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவிட்ட பாண்டுரங்கா என்ற சதீஷ், நேற்று இரண்டாவது கூடுதல் சிவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நாளை (இன்று) வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேவேளையில், ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த அவர் மனு மீதான விசாரணை இன்று மாலை 3:00 மணிக்கு நடக்க உள்ளது.

* முதல்வர் உத்தரவு

இந்நிலையில், பெங்களூரில் நேற்று, முதல்வரின் காவேரி இல்லத்தில், மைசூரு கலெக்டர், மாநில போலீஸ் டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகியோருடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.

உதயகிரி சம்பவம் குறித்து கேட்டறிந்தார். 'தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை கையில் எடுத்தோரை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும்.

'நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது. வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். போலீசார் மீது கற்களை வீசி தலைமறைவாக உள்ளோரை விரைவில் கைது செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

***






      Dinamalar
      Follow us