ADDED : ஏப் 03, 2024 07:35 AM

மாண்டியா : ''அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன,'' என்பது குறித்து, மாண்டியா எம்.பி., சுமலதா இன்று முடிவை அறிவிக்கிறார்.
மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா. லோக்சபா தேர்தலில் பா.ஜ., 'சீட்' எதிர்பார்த்தார். ஆனால் கூட்டணி கட்சியான ம.ஜ.த.,வுக்கு மாண்டியா தொகுதியை, பா.ஜ., கொடுத்தது. சுமலதா அதிருப்தி அடைந்தார்.
இதற்கிடையில் சுமலதாவை, மாண்டியா ம.ஜ.த., வேட்பாளர் குமாரசாமி சந்தித்து பேசினார். தன்னை ஆதரிக்கும்படி கோரினார். ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் முடிவை கூறுவதாக, சுமலதா கூறி இருந்தார்.
ஏற்கனவே அறிவித்தபடி, மாண்டியா காளிகாம்பா கோவிலில் இன்று காலை 10:00 மணிக்கு, ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். அதன்பின்னர் தனது முடிவை அறிவிக்கிறார். சுயேச்சையாக போட்டியிடுவாரா அல்லது குமாரசாமியை ஆதரிப்பாரா என்பது, இன்று தெரியவரும்.

