ADDED : மார் 08, 2025 02:17 AM

* சட்டசபைக்கு, காலை 10.05 மணிக்கு, முதல்வர் சித்தராமையா சக்கர நாற்காலியில் வந்தார். அப்போது, பட்ஜெட் புத்தகத்தை, வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் எடுத்து வந்தார். சக்கர நாற்காலியை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தள்ளி கொண்டு வந்தார். அரங்கில் நுழைந்ததும், ஊன்றுகோல் மூலம் முதல்வரே நடந்து சென்று, அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தார்.
* முதல்வர் வந்ததும், துணை முதல்வர் சிவகுமார் உட்பட அமைச்சர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
* ஒரு முறை கூட தண்ணீர் பருகாமல், பட்ஜெட் புத்தகத்தை முதல்வர் வாசித்து முடித்தார்.
* சட்டசபைக்குள், சபாநாயகர் காதர் வந்ததும், என்ன தலைவரே, முகம் பிரகாசமாக ஜொலிக்கிறது என்று பா.ஜ., உறுப்பினர் பைரதி பசவராஜ் நக்கலாக கேட்டார்.
* அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஊடகத்தினருக்கு, சட்டசபை உணவகத்தில், கேரட் அல்வா, ஜவ்வரிசி இட்லி, உளுந்து வடை, அவில் புலியோதரை, கடலைக்காய் சட்னி, காய்கறி சாகு, டீ, காபி இலவசமாக வழங்கப்பட்டது.