தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ மணிப்பூர் விசிட் எப்போது?

மணிப்பூர் விசிட் எப்போது?

மணிப்பூர் விசிட் எப்போது?


ADDED : செப் 04, 2024 12:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2024 12:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கும் பிரதமர் மோடி, தற்போது ப்ரூனே சென்றுள்ளார். ஆனால், நம் நாட்டின் மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் வெடித்து 16 மாதங்கள் ஆகின்றன. நுாற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். எப்போது மனிதாபிமான அடிப்படையில் பிரதமர் மணிப்பூர் செல்வார்?

ஜெய்ராம் ரமேஷ்

பொதுச் செயலர், காங்கிரஸ்

தந்திரம் செய்கின்றனர்!


பிரதமர் மோடி பொது சிவில் சட்டத்தை, மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்கிறார். ஏனென்றால் உத்தரகண்டில் இருக்கும் சிவில் சட்டம் உ.பி.,யில் இல்லை. டில்லியில் இல்லை. பின் எப்படி பொது சிவில் சட்டம் என கூற முடியும். அதனால் இந்த தந்திரத்தை பயன்படுத்துகிறார். பொது சிவில் சட்டத்துக்கு ஒருமித்த கருத்து தேவை.

அபிஷேக் சிங்வி

ராஜ்யசபா எம்.பி., காங்கிரஸ்

ஒற்றுமையை காட்ட வேண்டும்!


ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., சொல்வதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது. அவர்களின் காதை பிடித்து உட்கார வைத்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.

லாலு பிரசாத்

மூத்த தலைவர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us