தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்

குரங்கம்மை தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்


ADDED : செப் 14, 2024 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2024 03:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெனீவா : ஆப்ரிக்க நாடான காங்கோவில் 'எம் பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை பாதிப்பு முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை ஆப்ரிக்காவில் குரங்கம்மைக்கு 107 பேர் உயிரிழந்துள்ளனர். 3,160 பேருக்கு தொற்று பாதிப்பு உள்ளது.

பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த கிருமி தான் குரங்கம்மை நோயை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், உடல் வலி, உடல் சில்லிடுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகள். மிகவும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கு முகம், கை, மார்பு மற்றும் பிறப்புறுப்புகளில் கட்டிகள் தோன்றும். இறப்பு ஏற்படும்.

இந்நிலையில் குரங்கம்மைக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த, 'பவாரியன் நார்டிக்' எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் தயாரித்தது. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு பின் உலக சுகாதார நிறுவனம் அந்த தடுப்பூசிக்கு நேற்று ஒப்புதல் வழங்கியது.

அந்த ஒப்புதலில், இந்த ஊசியை, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது பயன்படுத்த வேண்டும். இரண்டு டோஸ்களாக இந்த தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். குழந்தைகளிடையே குரங்கம்மை அதிகம் பரவியிருந்தால், அந்த சூழலில் தடுப்பூசியின் ஆபத்துக்களை விட, நன்மை அதிகம் எனில் அப்போது பயன்படுத்தலாம் என, தெரிவிக்கப்ட்டுள்ளது.

தடுப்பூசி தேவைப்படும் ஆப்ரிக்க நாடுகளுக்கு அதிகளவில் கொள்முதல், நன்கொடை போன்றவை வாயிலாக விநியோகிக்க உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் கெப்ரியாசெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us