ADDED : ஜூன் 11, 2024 01:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வரம்: ஒடிசா பா.ஜ., முதல்வரை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டம் இன்று கூடி அறிவிக்கிறது.
லோக்சபா தேர்தலுடன் இம்மாநில சட்டசபைக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பா.ஜ., வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது.
இதையடுத்து இன்று நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பூபேந்திர யாதவ் ஆகியோர் பங்கேற்று பா.ஜ. சட்டசபை கட்சி தலைவரை தேர்வு செய்யகின்றனர். தேர்வு செய்யப்படுபவர் முதல்வராக நாளை (ஜூன் 12) பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.