காங்கிரசை சிக்கலில் சிக்க வைத்த ஷாம் பிட்ரோடா யார்
காங்கிரசை சிக்கலில் சிக்க வைத்த ஷாம் பிட்ரோடா யார்
ADDED : மே 08, 2024 07:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரண்டாம் முறையாக சர்ச்சையில் சிக்கியதால் காங்., அயலக அணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள சாம் பிட்ரோடா, அந்த கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்.
இந்திரா பிரதமராக இருந்தபோது அவருக்கு உதவியாக இருந்த பிட்ரோடா, ராஜிவ் பிரதமரான போது அவருக்கு ஆலோசகராக செயல்பட்டார்.
2004ல் பிரதமரான மன்மோகன் சிங்கும், பிட்ரோடாவை தேசிய அறிவுசார் ஆணைய தலைவராக நியமித்தார்.
காங்., எம்.பி., ராகுலின் குருவாக கருதப்படுபவர் பிட்ரோடா என்பது குறிப்பிடத்தக்கது.

