ADDED : ஜூலை 22, 2024 06:25 AM

ஹாசன்: ''வால்மீகி ஆணையத்தின் 87 கோடி ரூபாயை அதிகாரிகளே சாப்பிடுகின்றனர் என்றால், அதற்கு பின்னால் உள்ள பெரிய திமிங்கிலம் யார்,'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் சிக்கி உள்ளதால், வெளியே வர முடியாமல் தவிக்கிறது. தலித்களின் பணத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.
சித்தராமையா பிற்படுத்தப்பட்டோர் தலைவர் என்பதால், சட்டசபையில் அவரை பேச அனுமதிக்கவில்லை என்று அமைச்சர் ராஜண்ணா கூறுகிறார். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் திருடலாம் என்று அரசியல் சாசனத்தில் உள்ளதா.
மக்களுக்கு தவறான தகவல் தரக்கூடாது. ஊழலில் யாருக்கும் தொடர்பு இல்லை. அதிகாரிகளே அனைத்தையும் சாப்பிட்டு விட்டனர் என்றனர்.
வால்மீகி ஆணையத்தின் 87 கோடி ரூபாயை அதிகாரிகளே சாப்பிடுகின்றனர் என்றால், அதற்கு பின்னால் பெரிய திமிங்கிலமே இருக்கிறது. அரசு திவாலாகி விட்டது. அவரிடம் பணம் இல்லாததால், தலித் நலன்களுக்கான பணத்தை, வாக்குறுதி திட்டத்துக்கு பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.