தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?: ஆம்ஆத்மி கேள்வி
தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?: ஆம்ஆத்மி கேள்வி
ADDED : மார் 25, 2024 04:55 PM

புதுடில்லி: தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? என ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அதிஷி நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு போலி வழக்கில் சிக்க வைத்து, அமலாக்கத்துறையை பயன்படுத்தி பா.ஜ., சிறையில் அடைத்துள்ளது. தேர்தல் தேதி அறிவித்த உடனேயே கெஜ்ரிவாலை கைது செய்தது ஏன்?. ஏனென்றால் பிரதமர் மோடிக்கு எதிராக கெஜ்ரிவாலால் சவால் விட முடியும்.
ஹோலி ஒரு பண்டிகை மட்டுமல்ல, தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியின் சின்னம். ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு தலைவரும் அநீதிக்கு எதிராக இரவும், பகலும் போராடி வருகின்றனர். இந்த ஆண்டு, நாங்கள் வண்ணங்களுடன் விளையாட மாட்டோம், ஹோலி பண்டிகை கொண்டாட மாட்டோம். ஜனநாயகத்தை காப்பாற்ற தீமைக்கு எதிராக ஆம்ஆத்மி கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

