எங்கள் தொண்டர்களை மட்டும் சிறை பிடிப்பது ஏன்?: பரூக் அப்துல்லா கேள்வி
எங்கள் தொண்டர்களை மட்டும் சிறை பிடிப்பது ஏன்?: பரூக் அப்துல்லா கேள்வி
UPDATED : மே 13, 2024 02:41 PM
ADDED : மே 13, 2024 01:01 PM

ஸ்ரீநகர்: 'எங்கள் கட்சி தொண்டர்களை மட்டும் வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கேட்க விரும்புகிறேன்' என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா ஓட்டளித்தார். பின்னர் நிருபர்களிடம் பரூக் அப்துல்லா கூறியதாவது: எங்குமே வன்முறை இல்லை, அமைதி நிலவுகிறது என சொல்லிக் கொள்ளும் பா.ஜ., அரசு, எங்கள் கட்சியினரை கடந்த 2 நாட்களாக வீட்டு காவலில் வைத்துள்ளது.
பயம்
எங்கள் கட்சி தொண்டர்களை மட்டும் வெளியில் விடாமல் பிடித்து வைத்து இருப்பது ஏன் என பிரதமர் மோடியிடமும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கேட்க விரும்புகிறேன். தோல்வி அடைந்துவிடுவோம் என பா.ஜ., பயப்படுகிறது. உண்மையில் அந்தக் கட்சி தோற்கத்தான் போகிறது. தேர்தல் நாள் வந்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.