ADDED : செப் 14, 2024 08:23 AM

இப்போதெல்லாம் பலர் ஆரோக்கியமாக இருக்கவும், நோய்களில் இருந்து விலகி இருக்கவும் சிறு தானியங்களை பயன்படுத்த துவங்குகின்றனர். கோதுமை மற்றும் அரிசியுடன் ஒப்பிடும் போது, சிறு தானியங்கள் ஆரோக்கியத்துக்கு சிறந்தது என்று கூறப்படுகிறது. ஏனெனில், சிறு தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
நீரிழிவு
நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், 'கிளைசெமிக் இன்டெக்ஸ்' குறைவாக உள்ள உணவுகளை உட்கொள்வதால், நீரிழிவு அளவை உயர்த்தாமல், படிப்படியாக குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும்.
தானியங்கள் மெதுவாக ஜீரணம் ஆவதால், அது சர்க்கரையை ரத்தத்தில் கலக்கிறது. இதனால் நீரிழிவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ்' உள்ள உணவில் நார்சத்து, புரதம் மற்றும் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உறுதிபடுத்த உதவுகிறது.
எடை இழப்பு
தானியங்களில் பல்வேறு வகையான தானியங்கள் உள்ளன.
இதில் உள்ள கேழ்வரகு, உடல் கொழுப்பை குறைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
தொடர்ந்து தானியங்களை உட்கொள்வதால், குறிப்பிடத்தக்க எடை இழப்புக்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தையும், மேம்படுத்துகிறது. இது குடல் தொடர்பான நோய்களை தடுக்க உதவுகிறது.
இதயநோய்
சிறு தானியத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் என்ற கெட்ட கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இதனால் ரத்தம் உறைவதை தடுக்கலாம். சிறுதானியங்களை உட்கொள்வதன் மூலம், இதய நோய், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.
மோர் முக்கியம்
சிறுதானியங்கள் கெட்டியான உணவு என்பதால், சிலருக்கு அஜீரணம் ஏற்படும். எனவே, சிறுதானியங்களை உட்கொண்ட பின், மோர் குடிக்க வேண்டும்.
இப்போதிருந்து நீங்கள் மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் சிறு தானியங்கள் உணவை வழங்கி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம் - நமது நிருபர் -.