சீனா ஏன் இந்திய எல்லைக்குள் நுழைகிறது?: கேட்கிறார் கார்கே
சீனா ஏன் இந்திய எல்லைக்குள் நுழைகிறது?: கேட்கிறார் கார்கே
ADDED : ஏப் 04, 2024 05:25 PM

ஜெய்ப்பூர்: நீங்கள் பயப்படவில்லை என்றால், சீனா ஏன் இந்திய எல்லைக்குள் நுழைகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கார் மாவட்டத்தில் நடந்த பேரணியில் கார்கே பேசியதாவது:
1989ம் ஆண்டில் இருந்து காந்தி குடும்பத்தில் இருந்து யாரேனும் பிரதமராகவோ அல்லது மத்திய அமைச்சராகவோ ஆகியிருக்கிறார்களா? இன்னும் பிரதமர் மோடி வாரிசு அரசியலைப் பற்றி பேசுகிறார்.
நீங்கள் பயப்படவில்லை என்றால், சீனா ஏன் இந்திய எல்லைக்குள் நுழைகிறது. நீங்கள் தூங்குகிறீர்களா?. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றி வருகிறார்?. ஆனால் மணிப்பூருக்கு செல்லவில்லை. நேரு, இந்திரா ஆகியோர் இந்தியாவில் ஊசிகள் கூட தயாரிக்கப்படாத போது ராக்கெட்டுகளை உருவாக்கினர்?.
ஊழலை ஒழிப்பேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார். பா.ஜ., விடம் மிகப்பெரிய வாஷிங்மெஷின் உள்ளது. அதில் ஊழல்வாதிகள் அனைவரும் சுத்தம் செய்யப்படுவார்கள். காங்கிரஸ் கட்சி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.135 கோடி எடுக்கப்பட்டது. இன்று காங்கிரசுக்கு ரூ.3,567 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது காங்கிரஸ் கட்சி. பிரதமர் மோடி தனது சொந்த பணம் மற்றும் நன்கொடை மூலம் பிரசாரம் செய்ய வேண்டும். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால் அவர் எதையும் செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
