ADDED : ஏப் 22, 2024 07:05 AM

பெங்களூரு: ''அனைத்து விஷயத்துக்கும், கருத்து கூறும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சேத்தன் அஹிம்சா, மாணவி நேஹா கொலை குறித்து வாய் திறக்காதது ஏன்,'' என நடிகர் பிரதம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹூப்பள்ளியில், கல்லுாரி மாணவி நேஹா, சில நாட்களுக்கு முன் கல்லுாரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த பயாஸ் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக, நடிகர் பிரதம் கூறியதாவது:
மாணவி நேஹாவை கொலை செய்தவரை, கடுமையாக தண்டிக்க வேண்டும். நேஹாவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும்.
ஒவ்வொரு விஷயத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சிப்பார். நமது மண்ணின் மகள் நேஹா கொலை செய்யப்பட்டும், பிரகாஷ் ராஜ் ஏன் குரல் எழுப்பவில்லை.
நடிகர் சேத்தன் அஹிம்சாவும், வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார். பெயரில் மட்டும் அஹிம்சையை வைத்திருந்தால் போதாது. இத்தகைய சம்பவங்கள் நடக்கும் போது, கண்டிக்க வேண்டும். சேத்தனும், பிரகாஷ் ராஜும் தங்களின் வசதிக்கு ஏற்ப பேசுவதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

