ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி
ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி
ADDED : மார் 29, 2024 11:33 AM

புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதந்திர நீதித்துறை முக்கியமானது என தெரிவித்து இருந்தனர். நீதிபதிகளில் ஒருவர் உங்கள் அரசால் ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். எனவே யார் 'உறுதியான நீதித்துறையை' விரும்புகிறார்?
தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை வேட்பாளராக நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வந்தவர் யார்? ஏன் உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது?
உங்கள் சொந்த பாவங்களுக்காக காங்கிரஸ் கட்சியின் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். ஜனநாயகத்தை கையாள்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்!. இவ்வாறு கார்கே கூறினார்.

