ADDED : செப் 03, 2024 12:17 AM

ராம்நகர்: கர்நாடக மாநிலம், ராம்நகர், சென்னப்பட்டணாவின் அப்பூர் தொட்டி கிராமத்தில் வசிப்பவர் சாந்தம்மா, 60. இவரது மகன் ரவீந்திரா, 32.
இவருக்கும், சஞ்சனா, 25, என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கணவரை இழந்த சாந்தம்மா, மகனுடன் வசிக்கிறார்.
மாமியாரை வீட்டில் வைத்து பராமரிக்க, மருமகள் சஞ்சனாவுக்கு விருப்பம் இல்லை; வீட்டை விட்டு விரட்ட முயற்சித்தார்; அடிக்கடி அடித்து துன்புறுத்தினார். இதற்கு மகன் ரவீந்திராவும் உடந்தையாக இருந்தார். நேற்று காலை மாமியாருடன் தகராறு செய்த சஞ்சனா, வயதானவர் என்றும் பார்க்காமல், உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதைத் தடுக்காத ரவீந்திரா, தாய் அடி வாங்குவதை மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்தார்; இதை தன் உறவினர்களுக்கு அனுப்பினார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.