ADDED : ஆக 22, 2024 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாண்டியா: மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா ராகிமுத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ், 40; தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி அனிதா, 37; பாண்டவபுரா டவுன் சாந்திநகரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியை.
தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடராஜுக்கும், திருமணமான பெண்ணுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்தது. இதுபற்றி அனிதாவுக்கு தெரிந்தது. கடந்த 16ம் தேதி இரவு, கணவரை தட்டிக் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், மனைவி தலையில் சுத்தியலால் நடராஜ் ஓங்கி அடித்தார். மயங்கி விழுந்து சுயநினைவு இழந்த அனிதாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மைசூரு கே.ஆர்., அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். நடராஜ் கைது செய்யப்பட்டார்.