sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லியின் 7 தொகுதிகளையும் தக்க வைக்குமா பா.ஜ.,? அனுதாப அலை கைகொடுக்கும் என ஆம் ஆத்மி நம்பிக்கை!

/

டில்லியின் 7 தொகுதிகளையும் தக்க வைக்குமா பா.ஜ.,? அனுதாப அலை கைகொடுக்கும் என ஆம் ஆத்மி நம்பிக்கை!

டில்லியின் 7 தொகுதிகளையும் தக்க வைக்குமா பா.ஜ.,? அனுதாப அலை கைகொடுக்கும் என ஆம் ஆத்மி நம்பிக்கை!

டில்லியின் 7 தொகுதிகளையும் தக்க வைக்குமா பா.ஜ.,? அனுதாப அலை கைகொடுக்கும் என ஆம் ஆத்மி நம்பிக்கை!


ADDED : ஏப் 18, 2024 12:32 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தலைநகர் டில்லியில் 7 லோக்சபா தொகுதிகளையும் மூன்றாவது முறையாக தக்க வைத்துக் கொள்ள பா.ஜ., கடும் முயற்சி செய்து வருகிறது. அதேநேரத்தில், டில்லியை மூன்றாவது முறையாக ஆளும் ஆம் ஆத்மி --கட்சி, டில்லியில் லோக்சபா தொகுதிகளைக் கைப்பற்ற காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு இருப்பது ஓட்டுக்களை அதிகரித்து வெற்றியைத் தேடித் தரும் என ஆம் ஆத்மி கட்சி நம்புகிறது.

டில்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 25ல் தேர்தல் நடக்கிறது.

இங்குள்ள 7 தொகுதிகளிலும் பா.ஜ., தனித்துப் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து களம் இறங்கியுள்ளன.

டில்லி மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா, “டில்லியின் 7 லோக்சபா தொகுதிகளிலும் பா.ஜ.,வுக்கு வெற்றி உறுதி. ஓட்டு வித்தியாசத்தை அதிகரிப்பதுதான் பா.ஜ.,வின் இலக்கு,”என, கூறியுள்ளார்.

பூர்வாஞ்சல் மற்றும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் வடகிழக்கு டில்லி தொகுதியில் பீஹாரைச் சேர்ந்த பா.ஜ., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாக பா.ஜ., சார்பில் மனோஜ் குமார் திவாரி போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சி, கன்ஹையா குமாரை களம் இறக்கியுள்ளது.

கடந்த 2019ல் நடந்த தேர்தலில் பீஹார் மாநிலம் பெகுசராய் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட கன்ஹையா குமார் தோல்வியடைந்தார்.

இந்த தொகுதியில் திவாரி தன் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வார் என்றே அரசியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

மாணவர் சங்கத் தலைவராக இருந்த கன்ஹையா குமாரின் இடதுசாரிகளுடனான தொடர்பும் டில்லியில் அவரது வெற்றியைப் பாதிக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால், குமாரின் புகழ் மற்றும் அவரது பேச்சுத்திறன் ஆகியவற்றை பயன்படுத்தி இங்கு முத்திரை பதிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

கிழக்கு டில்லி பொதுத் தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி தலித் எம்.எல்.,ஏ-வான குல்தீப் குமாரை களம் இறக்கியுள்ளது. எனவே, இங்கு ஆம் ஆத்மிக்கு ஓட்டுக்கள் பாதிக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

ஆனால், இந்தத் தொகுதியில், தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்களிடம் மோடிக்கு எதிரான அலை வீசுவதாக ஆம் ஆத்மி கூறுகிறது. எனவே, இங்கு பா.ஜ.,வுக்கு தோல்விதான் பரிசாகக் கிடைக்கும் என ஆம் ஆத்மி நம்புகிறது.

கடந்த 2019ல், பா.ஜ.,வின் கவுதம் கம்பீர், காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்லியை 3.93 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் இங்கு தோற்கடித்தார். அப்போது இங்கு போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி சிங், மூன்றாவது இடத்தைத்தான் அடைய முடிந்தது.

இந்த தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருப்பதால், கிழக்கு டில்லியில் பா.ஜ.,வின் எதிர்ப்பு ஓட்டுக்களை ஒருங்கிணைக்க முடியும் என ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.

ஆனால், டில்லியின் 7 லோக்சபா தொகுதிகளையும் மூன்றாவது முறையாக பா.ஜ., தக்கவைத்துக் கொள்ளும் என அதன் தலைவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

கடந்த 2019ல் டில்லியில் 7 லோக்சபா தொகுதிகளிலும் பதிவான ஓட்டுக்களில் பா.ஜ., 56.5 சதவீதம், காங்கிரஸ் 22 சதவீதம், ஆம் ஆத்மி கட்சி 18.1 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றிருந்தன.

இந்த தேர்தலில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க ஜாதி ரீதியாகவும் ஆய்வு செய்து வேட்பாளர்களை பா.ஜ., தேர்வு செய்துள்ளது.

கிழக்கு டில்லியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்ஷ் மல்ஹோத்ரா, சாந்தினி சவுக்கில் பனியா இன தலைவர் பிரவின் கன்தெல்வால், தெற்கு டில்லியில் குஜ்ஜார் இனத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ராம்வீர் சிங் பிதுரி, மேற்கு டில்லியில் ஜாட் இனத்தைச் சேர்ந்த கமல்ஜித் செராவத், வடமேற்கு டில்லியில் தலித் இனத்தைச் சேர்ந்த யோகேந்திர சந்தோலியா, புதுடில்லியில் பன்சுரி ஸ்வராஜ், வடகிழக்கு டில்லியில் மனோஜ் குமார் திவாரி ஆகியோரை பா.ஜ., களம் இறக்கியுள்ளது.

டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேட்டில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, இதே வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை வைத்தே அனுதாபம் தேடும் வகையில் பிரசாரம் செய்து வருகிறது.

புதுடில்லி தொகுதியில் சோம்நாத் பாரதி, தெற்கு டில்லியில் சாஹிராம் பெஹல்வான், மேற்கு டில்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., மஹபால் மிஸ்ரா, கிழக்கு டில்லியில் குல்தீப் குமார் ஆகியோரையும் ஆம் ஆத்மி கட்சி களம் இறக்கியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் சாந்தினி சவுக் தொகுதியிலும், பா.ஜ., முன்னாள் எம்பி உதித் ராஜ் வடமேற்கு டில்லி தொகுதியிலும், வடகிழக்கு டில்லியில் மாணவர் சங்க முன்னாள் தலைவரான கன்ஹையா குமார் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.






      Dinamalar
      Follow us