மகனுக்கு பதில் தந்தை; காஷ்மீர் தேர்தலில் களம் இறங்கினார் பரூக் அப்துல்லா
மகனுக்கு பதில் தந்தை; காஷ்மீர் தேர்தலில் களம் இறங்கினார் பரூக் அப்துல்லா
UPDATED : ஆக 17, 2024 07:03 AM
ADDED : ஆக 17, 2024 06:22 AM

ஸ்ரீநகர்: 'ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் நான் போட்டுயிடுகிறேன். மகன் உமர் அப்துல்லா போட்டியிடமாட்டார்' என தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்.,18லும், 2ம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்., 25லும், 3ம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.,1லும் தேர்தல் நடைபெறும்.
மாநில அந்தஸ்து
இந்நிலையில், பரூக் அப்துல்லா நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் நான் கட்சியை வழிநடத்த போகிறேன். தேர்தலில் நான் போட்டுயிடுகிறேன். நாங்கள் தனிப்பெரும்பான்மை பெறுவோம். மகன் உமர் அப்துல்லா போட்டியிடமாட்டார். அவர், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முடிவு எடுத்துள்ளார்.
வரவேற்கிறேன்!
மாநில அந்தஸ்து கிடைத்ததும் நான் பதவி விலகுவேன். ஒமர் அப்துல்லா அந்த தொகுதியில் போட்டியிடுவார். காஷ்மீர் சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்கிறேன். எல்லைகளில் அதிக அளவில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த நாட்டிலும் இல்லை என்று நான் உணர்கிறேன். ஆனால் பயங்கரவாதிகள் காஷ்மீரில் பதுங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

