ADDED : மார் 26, 2024 11:32 PM

கார்வார்: “நான் கூறினால் உத்தர கன்னடா பா.ஜ., வேட்பாளரை மாற்றுவரா?” என, அக்கட்சி எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் கேள்வி எழுப்பி உள்ளார்.
உத்தர கன்னடா எல்லாபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., சிவராம் ஹெப்பார் அளித்த பேட்டி:
உத்தர கன்னடா தொகுதி பா.ஜ., - எம்.பி.,யாக இருந்த அனந்த்குமார் ஹெக்டேவுக்கு பதிலாக, விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரிக்கு சீட் வழங்கியதால், பா.ஜ., தலைவர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். எனக்கும் அதிருப்தி உள்ளது. ஆனால் நான் கூறினால் வேட்பாளரை மாற்றுவரா?
கர்நாடக பா.ஜ., தலைவர்கள், தங்கள் வசதிக்கு ஏற்ப முடிவு எடுக்கக் கூடியவர்கள். காங்கிரசில் இணைவதாக நான் எங்கும் கூறவில்லை.
ஒரு கட்சியை பிடிக்கவில்லை என்றால், அந்த கட்சியில் இருந்து துாரத்தை கடைப்பிடிக்க வேண்டும். காங்கிரசார், பா.ஜ.,வில் தலைவர்கள் மாறி மாறி இணைவது காலம், காலமாக நடக்கிறது.
ராஜ்யசபா தேர்தலில் நான் ஓட்டுப் போடவில்லை என்று சொல்கின்றனர். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 6 பேர் கட்சி மாறி, பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போட்டனர். அதை பற்றி யாரும் பேசுவது இல்லை. ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்தால் சரி; கர்நாடகாவில் நடந்தால் தவறா?
இவ்வாறு அவர்கூறினார்.

