sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'மூடா' முறைகேடில் முதல்வருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா?: நாளை தீர்ப்பளிக்கிறது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம்

/

'மூடா' முறைகேடில் முதல்வருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா?: நாளை தீர்ப்பளிக்கிறது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம்

'மூடா' முறைகேடில் முதல்வருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா?: நாளை தீர்ப்பளிக்கிறது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம்

'மூடா' முறைகேடில் முதல்வருக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா?: நாளை தீர்ப்பளிக்கிறது மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம்


ADDED : ஆக 12, 2024 07:30 AM

Google News

ADDED : ஆக 12, 2024 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'மூடா' முறைகேடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சமூக ஆர்வலர் தாக்கல் செய்த மனுவை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பான தீர்ப்பு நாளை வெளியாவதால், அனைவரின் பார்வையும் நீதிமன்றத்தின் மீது பதிந்துள்ளது.

'மூடா' எனும் மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இது காங்கிரஸ் மற்றும் அரசுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் குடும்பத்தினர் பெயர் அடிபடுவதால், அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கின்றன.

சமீபத்தில் நடந்த சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் மூடா விஷயத்தை வைத்து கொண்டு, அரசுக்கு எதிர்க்கட்சிகள் குடைச்சல் கொடுத்தன.

பா.ஜ., எதிர்பார்ப்பு


அது மட்டுமின்றி பெங்களூரில் இருந்து மைசூருக்கு ம.ஜ.த., - பா.ஜ., கூட்டணி கட்சிகள், பாதயாத்திரை நடத்தின. மைசூரில் பிரமாண்ட பொதுக்கூட்டமும் நடத்தின. 'முதல்வர் ராஜினாமா செய்யும் வரை ஓய்வதில்லை' என, உறுதி பூண்டுள்ளன.

இந்த விஷயத்தில், காங்கிரஸ் மேலிடமும் கவலையில் உள்ளது. முதல்வருக்கு பக்கபலமாக நிற்கும்படி, அமைச்சர்களுக்கு கட்டளையிட்டுள்ளது.

இதன்படி அவர்களும், முதல்வருக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர். 'அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை. அவர் ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்' என, வாதம் செய்கின்றனர்.

பெங்களூருரை சேர்ந்த வக்கீலும், சமூக ஆர்வலருமான ஆபிரஹாம், முதல்வர் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.

மனு தாக்கல்


தவிர, 'மூடாவில் நடந்த முறைகேட்டில், முதல்வர் சித்தராமையாவுக்கு தொடர்புள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்' என, மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஸ்னேகமயி கிருஷ்ணா என்பவர், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இதுகுறித்து விசாரித்த நீதிமன்றம், புகாரை விசாரணைக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து, ஆகஸ்ட் 13ல், தீர்ப்பளிப்பதாக அறிவித்தது.

இதன்படி, நாளை தீர்ப்பு வெளியாவதால், ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர் பார்வை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தின் மீது பதிந்துள்ளது. கவர்னர் தாவர்சந்த் கெலாட்டும், இதற்காக காத்திருக்கிறார்.

மனுவை மக்கள் பிரதிதிகள் சிறப்பு நீதிமன்றம் அங்கீகரித்தால், அதன் அடிப்படையில், முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கக்கூடும் என, கூறப்படுகிறது. கவர்னரும், தற்போது தர்ம சங்கடத்தில் நெளிகிறார்.

முதல்வருக்கு எதிரான விசாரணைக்கு அனுமதி அளித்தால், காங்கிரசார் போராட்டம் நடத்தி, குழப்பத்தை ஏற்படுத்துவர். மற்றொரு பக்கம் அனுமதி அளிக்கா விட்டால், நீதிமன்றத்தின் கதவை தட்டுவேன் என, ஆப்ரஹாம் கூறியுள்ளார்.

இதற்கு முன்பும் ஊழல் வழக்கில், அன்றைய முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிரான விசாரணைக்கு அன்றைய கவர்னர் அனுமதி அளிக்கவில்லை. அதன்பின், ஆபிரஹாம் நீதிமன்றத்தை நாடி, அனுமதி பெற்றார்.

ஆலோசனை


அதேபோன்று மூடா முறைகேட்டிலும், இன்றைய முதல்வர் சித்தராமையாவிடம் விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி அளிக்கா விட்டால் நீதிமன்றத்தில் முறையிட, ஆபிரஹாம் முடிவு செய்துள்ளார்.

எனவே, ஏதாவது ஒரு முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில், கவர்னர் சிக்கியுள்ளார்.

இது குறித்து சட்ட நிபுணர்களிடமும் அவர் ஆலோசனை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு ஏற்குமோ என்ற கவலை, முதல்வர் சித்தராமையாவையும் வாட்டி வதைக்கிறது.

விசாரணைக்கு ஏற்றால், அவரது பதவி ஆட்டம் கண்டாலும் ஆச்சரியப்பட முடியாது. 'நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே, அடுத்து கர்நாடகாவில் அரசியல் காட்சிகள் மாறும்' என, அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us