மதுபானம் விலை உயருமா? அமைச்சர் திம்மாபூர் மழுப்பல்!
மதுபானம் விலை உயருமா? அமைச்சர் திம்மாபூர் மழுப்பல்!
ADDED : ஜூன் 23, 2024 06:29 AM

கலபுரகி: ''கலால் துறையின் விபரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில், அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். மதுபானம் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கவில்லை,'' என அமைச்சர் திம்மாபூர் தெரிவித்தார்.
கலபுரகியில் அவர் அளித்த பேட்டி:
கலால் துறையில் என்ன நடக்கிறது, எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்பதை, நான் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தி தகவல் கேட்டறிந்தேன்.
மதுபானம் விலை உயர்வு குறித்து, நாங்கள் ஆலோசிக்கவில்லை. பா.ஜ., அரசு இருந்த போது, எவ்வளவு விலை உயர்த்தினர் என்பது தெரியும். அந்த கட்சியினர் விலையை உயர்த்தினால், யாரும் எதுவும் பேசுவதில்லை. நாங்கள் உயர்த்தினால் அனைவரும் பேசுகின்றனர்.
எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பேச, யோக்கியதை இருக்க வேண்டும். மதுபானம் விலையை உயர்த்தும் போது, ஊடகத்தினரிடம் தெரிவிப்பேன். இது பற்றி ஜூலை 1ல் தெரியும். வெளி மாநிலங்களில் இருந்து வரும் மதுபானத்தை கட்டுப்படுத்த, அரசு முயற்சிக்கிறது.
பெலகாவி, ராய்பாகில் அரசு சார்ந்த ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவம் நேற்று தான் என் கவனத்துக்கு வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.