sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு

/

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு

மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு

3


UPDATED : ஜூலை 19, 2024 04:58 PM

ADDED : ஜூலை 19, 2024 12:49 PM

Google News

UPDATED : ஜூலை 19, 2024 04:58 PM ADDED : ஜூலை 19, 2024 12:49 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர். விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள் ஏராளமான இடங்களில் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவிக்கின்றனர்.

சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் பெரும்பான்மையான மைக்ரோசாப்ட் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதிதாக அப்டேட் செய்தவர்களின் கணினியில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதால் பயனாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கின. மைக்ரோசாப்ட் கிளவுட் சேவைகளை பயன்படுத்தி வரும் விமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள் போன்றவையும் பிரச்னைக்கு உள்ளாகியுள்ளன.

விமான சேவைகள் பாதிப்பு


மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக டில்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட நிறுவன விமானங்கள் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் நண்பகல் முதல் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பயணிகளுக்கு கம்ப்யூட்டர் மூலம் போர்டிங் பாஸ் வழங்குவதில் தாமதம் காரணமாக, சென்னை உள்ளிட்ட பல விமான நிலையங்களில் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமாக கிளம்பி செல்கின்றன.

விமான நிலையங்களில் டிஸ்பளே திரைகள், செக் இன் சேவைகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு உள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா நாடுகளிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அவசர கூட்டத்திற்கு ஆஸி., அரசு அழைப்பு விடுத்து உள்ளது.உலகம் முழுவதும் 1,300க்கும் மேற்பட்ட விமானங்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

எஸ்பிஐ விளக்கம்

மைக்ரோசாப்ட் பிரச்னையால் எஸ்பிஐ வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த வங்கி விளக்கம் அளித்து உள்ளது.

விளக்கம்


இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் எனக்கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் இயக்குநர் வெங்கட ரங்கள் கூறியதாவது: யாரும் அச்சப்பட தேவையில்லை. வங்கி சர்வர் எதுவும் பாதிக்கப்படவில்லை. தரவுகள் திருடப்படவில்லை. கிரவுட் ஸ்டிரைக் ஆன்டி வைரஸ் பயன்படுத்துவோருக்கு மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். ரஷ்யாவில் உள்ள கணினிகள் பாதிக்கவில்லை. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளன. கிரவுட் ஸ்டிரைக் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு இணையவழியில் பாதுகாப்பு அளிக்கும் கிரவுட் ஸ்டிரைக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தொழில்நுட்ப கோளாறு இணையவழியில் விரைவில் செய்யப்படும். மேக் மற்றும் லினெக்ஸ் பாதிக்கப்படவில்லை. என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து விட்டோம். விரைவில் தீர்வு காணப்படும். மைக்ரோசாப்ட் பிரச்னை சைபர் தாக்குதல் கிடையாது. பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கிரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் பிரதிநிதிகளை தொடர்பு கொள்ளலாம் எனக்கூறப்பட்டு உள்ளது.

மத்திய அரசு ஆலோசனை

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் சேவை பாதிப்பு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோளாறுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்கள், மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

பங்கு வர்த்தகம் பாதிப்பு


மைக்ரோசாப்ட் கோளாரால் பங்கு வர்த்தகதமும் பாதிப்புக்கு உள்ளாகியது.

எலான் மஸ்க் கிண்டல்



Image 1295966


மைக்ரோசாப்ட் மென்பொருள் முடங்கியதை உலக பணக்காரரும், 'எக்ஸ்' வலைதளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் கிண்டல் அடித்துள்ளார். அனைவரும் பிஸியாக விளையாடி வரும் நிலையில் ஒரு முதியவர் மட்டும் குட்டிச்சுவரில் 'கூல்' ஆக படுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் மீம்-ஐ ஒருவர் பகிர்ந்துள்ளார். அதாவது, மைக்ரோசாப்ட் கோளாறால் அனைவரும் பாதிக்கப்பட்ட நிலையில், 'எக்ஸ்' தளம் எந்த பாதிப்புமின்றி இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதனை பகிர்ந்த எலான் மஸ்க், சிரிப்பது போன்ற 'எமோஜி'யை பதிவிட்டு கிண்டல் அடித்துள்ளார். அதேபோல், கடந்த 2021ல் மைக்ரோசாப்ட்டை விட மேக்ரோஹார்டு சிறந்தது என தான் பதிவிட்ட டுவிட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார் எலான் மஸ்க்.






      Dinamalar
      Follow us