பெண் டாக்டர் கொலை: குற்றவாளியை தூக்கிலிட மம்தா வலியுறுத்தல்
பெண் டாக்டர் கொலை: குற்றவாளியை தூக்கிலிட மம்தா வலியுறுத்தல்
ADDED : ஆக 15, 2024 12:04 AM

கோல்கட்டா: பெண் பயிற்சி டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் கடந்த 9ம் தேதி அங்குள்ள கருத்தரங்கு வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.
நாட்டை அலற வைத்துள்ள இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவத்தை கண்டித்து நாடு முழுதும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி கோல்கட்டா நீதிமன்றம் உத்தரவிட்டது. உடனடியாக வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டன. 25 பேர் கொண்ட குழு விசாரணையில் இறங்கியுள்ளது.
இது குறித்து இன்று மம்தா பானர்ஜி கூறியது, பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கை மேற்கு அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சி.பி.ஐ.,க்கு தேவையான ஒத்துழைப்பை எனது அரசு வழங்கும். இச் சம்பவத்தை எதிர்கட்சிகள் அரசியலாக்குவது சரியல்ல. வழக்கை விரைவாக முடித்து குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.