95 முறை மாமியாரை மாறி மாறி குத்தி கொன்ற மருமகளுக்கு மரண தண்டனை
95 முறை மாமியாரை மாறி மாறி குத்தி கொன்ற மருமகளுக்கு மரண தண்டனை
UPDATED : ஜூன் 12, 2024 05:13 PM
ADDED : ஜூன் 12, 2024 05:00 PM

போபால்: தனது 50 வயது மாமியாரை 95 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த, 24 வயது பெண்ணுக்கு மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவாவில் வசித்து வந்தவர் சரோஜ். இவருக்கும் இவரது மருமகளுக்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்தது. 2022ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மீண்டும் இவர்களுக்குள் சண்டை நடந்துள்ளது. அன்று வீட்டில் மாமியார் மட்டும் இருந்துள்ளார். இதனால் மருமகள் மாமியாரை வீட்டில் இருந்த கத்தியால் மாறி மாறி 95 முறை குத்திக் கொலை செய்தார்.
இது குறித்து சரோஜின் மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். மருமகள் கைது செய்யப்பட்டார். ரேவா மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரண்டு வருடங்களாக விசாரணை நடந்து வந்தது. மாமியாரை 95 முறை குத்தி கொலை செய்த, மருமகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மருமகள் பெயர் வெளியிடப்படவில்லை.