sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எருமை மாடு வாங்குவதற்காக 2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

/

எருமை மாடு வாங்குவதற்காக 2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

எருமை மாடு வாங்குவதற்காக 2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

எருமை மாடு வாங்குவதற்காக 2ம் திருமணம் செய்ய முயன்ற பெண்

1


ADDED : பிப் 25, 2025 02:19 AM

Google News

ADDED : பிப் 25, 2025 02:19 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ : உத்தர பிரதேசத்தில் எருமை மாடு வாங்குவதற்காக, முதல் கணவரை விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ய முயன்ற பெண், கடைசி நேரத்தில் பிடிபட்டார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், ஏழை எளிய ஜோடிகளுக்கு அரசு சார்பில் இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

பரிசு பொருட்கள்


இதன்படி, ஹஸன்புர் என்ற இடத்தில் உள்ள கல்லுாரியில், 300 ஜோடிகளுக்கு நேற்று முன்தினம் இலவச திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளுக்கு, 35,000 ரூபாய் ரொக்கம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்களை அரசு வழங்குகிறது.

இதற்காக, 300 ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கல்லுாரியில் நேற்று முன்தினம் திரண்டனர். அந்த இடமே களைகட்டி இருந்தது.

ஜோடிகள் தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, திருமணம் நடக்கும் அரங்கிற்குள் நுழைந்த சிலர், அஸ்மா - ஜபேர் அகமது என்ற ஜோடிக்கு திருமணம் செய்து வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் தலையிட்டு விபரம் கேட்டனர். அப்போது தான், அஸ்மா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது தெரியவந்தது.

அஸ்மா என்ற பெண்ணுக்கும், நுார் முகமது என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஆறு மாதங்களுக்கு முன் கணவரை பிரிந்து பெற்றோருடன் அஸ்மா வாழ்ந்து வருகிறார்.

இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நேரத்தில் தான், மாநில அரசின் இலவச திருமண திட்ட அறிவிப்பை அஸ்மா பார்த்துள்ளார்.

அதில், 35,000 ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, அஸ்மாவின் பணத்தாசையை துாண்டியது.

வழக்குப்பதிவு


தன் சொந்தக்கார இளைஞரான ஜபேர் அகமது என்பவரை திருமணம் செய்து கொள்ள, அஸ்மா முடிவு செய்தார். பணம், பரிசுப் பொருட்களை இருவரும் சரிசமமாக பிரித்துக் கொள்ள முடிவு செய்தனர்.

அந்த பணத்தில் எருமை மாடுகள் வாங்கி வியாபாரம் செய்ய அஸ்மா திட்டமிட்டு இருந்தார். திருமண திட்டத்துக்கு விண்ணப்பித்து, திருமணம் நடக்க இருந்த நேரத்தில் முதல் கணவரின் தந்தை மற்றும் உறவினர்கள் வந்து திருமணத்தை நிறுத்தினர்.

இதையடுத்து, அஸ்மா - ஜபேர் அகமது மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us