ADDED : மே 24, 2024 01:11 AM

புதுடில்லி, சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்தாம் கட்ட லோக்சபா தேர்தலில், 62.2 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. இந்த முறை ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் ஓட்டுகளை பதிவு செய்துஉள்ளனர்.
லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 20ம் தேதி நடந்தது. ஆறு மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
மொத்தம், 8.95 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதில், 4.69 கோடி ஆண்கள், 4.26 கோடி பெண்கள், 5,409 மூன்றாம் பாலினத்தவர்கள்.
இதில், பீஹார், ஜார்க்கண்ட், லடாக், ஒடிசா மற்றும் உத்தர பிரதேசத்தில், ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர். பீஹாரில் ஆண்கள் 52.42 சதவீதம் மட்டுமே ஓட்டளித்துள்ள நிலையில், பெண்களின் ஓட்டு விகிதம் 61.58 சதவீதமாக உள்ளது.
ஜார்க்கண்டில் பெண்களின் ஓட்டு விகிதம் 68.65 ஆக பதிவாகி உள்ள நிலையில், ஆண்கள் 58.08 சதவீதம் மட்டுமே ஓட்டளித்துள்ளனர்.