மகா.,வில் பெண்களுக்கு 'ஜாக்பாட்': மகளிர் உரிமை திட்டம் துவக்கம்
மகா.,வில் பெண்களுக்கு 'ஜாக்பாட்': மகளிர் உரிமை திட்டம் துவக்கம்
UPDATED : ஆக 18, 2024 10:06 PM
ADDED : ஆக 18, 2024 09:55 PM

மும்பை: மகாராஷ்டிரா மாநில பெண்களுக்கான முக்யமந்திரி லடுக்கி பெஹ்னா திட்டத்தை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே துவக்கினார்.
இது குறித்து முதல்வர் ஏக்நாத்ஷிண்டே கூறியதாவது: ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் முக்யமந்திரி லடுக்கி பெஹ்னா திட்டத்தை பெற தகுதியுடையவர்கள். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான பெண்கள் இத்திட்டத்தின்கீழ் மாதம் தோறும் ரூ.1,500 நிதி உதவி பெறுவர். குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால் ரூ.3,000 பெறுவர் என்றார்.
மேலும்அவர் கூறுகையில் பெண் குழந்தை பிறந்தது முதல், பள்ளிக்கு செல்லும் போது, 5,000 ரூபாயும், 5ம் வகுப்பு படிக்கும் போது, 7,000 ரூபாயும், 11ம் வகுப்புக்கு செல்லும் போது, 8,000 ரூபாயும், மாநில அரசு நிதியுதவியாக வழங்கப்படும். அந்த பெண் 18 வயதை அடையும் போது, அந்த பெண்ணிற்கு ரூ.1 லட்சம் கிடைக்கும்.
மேலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6,000-10,000 டிப்ளமோ பட்டமும், பயிற்சி பெற்ற மனிதவளத்தை வரவிருக்கும் தொழில்களுக்கு நாங்கள் எளிதாக்கும் வகையில் இன்டர்ன்ஷிப்பும் வழங்கப்படும் 'அவர்கள் காலியிடங்களுக்கு ஏற்ப தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் இதற்காக ஒரு பைசா கூட செலவழிக்க வேண்டியதில்லை, அரசாங்கம் செலவழிக்கும். இது வேலையில்லா திண்டாட்டத்தையும் சமாளிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுப்போம்,'
நாங்கள் எங்கள் வரம்புகளை மீறவில்லை, மேலும் எந்தவிதமான கடன் சுமையிலும் தத்தளிக்கவில்லை, ஏனென்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பெறலாம் என்ற நிலையில் நாங்கள் 17.5 சதவிகிதம் அளவில் இருக்கிறோம்
என்று அவர் கூறினார்.

