UPDATED : ஜூலை 05, 2024 02:08 AM
ADDED : ஜூலை 04, 2024 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு:தந்தங்களில் பிளாஸ்டிக் சாக்கு சிக்கிய நிலையில் படையப்பா ஆண் காட்டு யானை சுற்றித் திரிந்தது.
மூணாறு
பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகளில் படையப்பா யானை மிகவும்
பிரபலம். அந்த யானை கடந்த ஒருவாரமாக செண்டு வாரை எஸ்டேட் பகுதியில்
முகாமிட்டது. படையப்பாவின் முக்கிய அடையாளமாக நீண்ட தந்தங்களை
கருதுகின்றனர். பிளாஸ்டிக் கழிவுகளில் தீவனத்தை தேடி பழக்கப்பட்ட
படையப்பாவின் தந்தங்களில் அது போன்ற சூழலில் பிளாஸ்டிக் சாக்கு சிக்கிக்
கொண்டது. அதனால் தீவனம் தின்பதற்கு சிக்கல் இல்லை என்றபோதும் துதிக்கையை
மேல் நோக்கி தூக்க இயலவில்லை. தவிர துதிக்கையை அவ்வப்போது தந்தங்களில்
லாவகமாக தொங்கவிட்டுக் கொள்ளும். அதனை செய்ய இயலாமல் படையப்பா திண்டாடியது.