ADDED : மார் 26, 2024 06:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு: காட்டுயானை தாக்குதலுக்கு, டிம்பர் தொழிலாளி ஒருவர் பலியானார்.
சிக்கமகளூரு, தரிகெரேவின், வர்த்தேகுன்டி கிராமத்தில் வசித்த அக்பர், 36, டிம்பர் பணி செய்து வருகிறார். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது.
அவ்வப்போது காட்டு யானை, சிறுத்தை உட்பட வனவிலங்குகள் கிராமத்துக்குள் நுழையும்.
நேற்று காலை கிராமத்தின் தோட்டத்தில், ஒற்றை யானை புகுந்தது. இதையறிந்து அங்கு சென்ற அக்பர், யானையை விரட்ட முற்பட்டுள்ளார்.
அப்போது அவரை கீழே தள்ளிய யானை, மார்பில் மிதித்து கொன்றது.

