புனியாவுக்கு கட்சி பொறுப்பு; வினேஷ் போகத்திற்கு தேர்தலில் "சீட்"
புனியாவுக்கு கட்சி பொறுப்பு; வினேஷ் போகத்திற்கு தேர்தலில் "சீட்"
UPDATED : செப் 06, 2024 10:59 PM
ADDED : செப் 06, 2024 10:12 PM

அகில இந்திய கிசான் காங்கிரசின் செயல் தலைவராக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். வீராங்கணை வினேஷ் போகத் தேர்தலில் களம் இறங்குகிறார்.
மல்லிகார்ஜூன கார்கே முன்னிலையில் காங்கிரசில் இணைந்த நிலையில் பொறுப்பு அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 31 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. ஜூலானா சட்டமன்றத் தொகுதியில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை அக்கட்சி நிறுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா கர்ஹி சாம்ப்லா-கிலோய் தொகுதியில் போட்டியிடும் நிலையில், சிட்டிங் எம்எல்ஏ மம்மன் கான் பெரோஸ்பூர் ஜிர்கா சட்டமன்றத் தொகுதியிலும், மாநிலத் தலைவர் உதய் பான் ஹோடலிலும் இரண்டாவது முறையாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
முதல்வர் நயாப் சிங் சைனியை எதிர்கொள்ள லத்வா தொகுதியில் மேவா சிங்கை கட்சி நிறுத்தியுள்ளது.